நடிகர் சூர்யா ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இன்னொரு ஹிட் படத்தை கொடுக்க இயக்குனர் பாலா உடன் கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டார். இதற்கு முன்பாக இருவரும் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் இணைந்தனர்.
வணங்கான் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து கீர்த்தி ஷெட்டி மற்றும் பலர் நடித்து வந்தனர். படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது சூர்யாவுக்கு ஆரம்பத்தில் கடற்கரை ஓரத்தில் ஓடவே விட்டுள்ளார் ஒரு கட்டத்தில் கடுப்பான அவர் ஷூட்டிங்கை எடுக்காமல் என்னை ஏன் ஓடவிடுகிறீர்கள் என கேட்க..
கடுப்பான பாலா சூர்யா நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் பண்ணு.. கேள்வி கோட்கதாதே என சொல்லி உள்ளார் அதிலிருந்து இருவருக்கும் பிரச்சனை ஏற்ப்பட்டது. மேலும் படத்தின் கதையில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததால் ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன் என கூறினார்.
மேலும் தனது 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தையும் அதில் இருந்து விலக்கிக் கொண்டார். சூர்யா தற்போது சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து தனது 42வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். பாலா வணங்கான் படத்தை எடுத்தே தீர வேண்டும் எனக் கூறி..
சூர்யாவுக்கு பதில் வேறு ஒருவரை நடிக்கவைக்க நடிகரை தேடிக் கொண்டிருந்த நிலையில் ஒருவழியாக அருண் விஜய் சிக்கி உள்ளார். தோல்வியின் பிடியில் இருக்கும் அருண் விஜய்க்கு ஒரு வெற்றி படத்தை கொடுத்து தூக்க பாலா திட்டமிட்டு இருக்கிறார். வணங்கான் படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கும் என கூறப்படுகிறது இதற்கான அறிவிப்பும் வெகு விரைவிலேயே வெளியாகும்.