வணங்கான் திரைப்படத்தால் சூர்யாவுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா.? அடச்சே பாலா நம்ப வச்சு ஏமாத்திட்டாரே..

surya and bala
surya and bala

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடுபவர் நடிகர் சூர்யா. இவர் அண்மைக்காலமாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் சூரரை போற்று, எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம், விக்ரம், ராக்கெட்டேரி நம்பி போன்ற படங்களில் இந்த படம் அனைத்தும் ஹிட் அடித்தன.

இதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கைக்கோர்த்து வணங்கான் திரைப்படத்தில் நடித்தார். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் சூர்யாவின் 2d என்டர்டைன் நிறுவனம் தயாரித்தது. வணங்கான் திரைப்படத்தில் சூர்யாவுடன் கைகோர்த்து கீர்த்தி ஷெட்டி ஹீரோயின்னாகவும்..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்தனர். படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து நடிகர் சூர்யாவுக்கும், இயக்குனர் பாலாவுக்கும் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சமாதானம் செய்து மீண்டும் சூட்டிங் தொடங்கினார் ஆனால் பாலா மற்ற நடிகர்களிடம் பழகுவது போல  சூர்யாவுடனும் இப்பொழுது பழகி உள்ளார்.

ஆனால் சூர்யாவுக்கு அது சுத்தமாக பிடிக்காமல் இருவருக்கும் இடையே பிரச்சனை நிலவியது. ஒரு கட்டத்தில் வணங்கான் திரைப்படம் ட்ராப் ஆனது.  மேலும் சூர்யாவின் 2d என்டர்டைன்மெண்ட் நிறுவனமும் இதிலிருந்து விலகிக் கொண்டது இதனால் சூர்யாவுக்கு பல கோடி லாஸ் என சொல்லப்படுகிறது ஆம் வணங்கான் படத்தின் மூலமே கிட்டத்தட்ட சூர்யாவுக்கு 10 கோடி செலவு இழுத்துக் விடப்பட்டதாம்.

வணங்கான் திரைப்படத்திலிருந்து வெளியேறிய நடிகர் சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து தனது 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதனை தொடர்ந்து வாடிவாசல், சூரரை போற்றுவார் ரீமேக் மற்றும் பெயரிடப்படாத ஒரு சில படங்களில் அவர் கமிட் ஆகி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.