சூடு பிடிக்கும் வாரிசு அப்டேட்.! 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு ரீமிக்ஸ்.! இசையமைப்பாளர் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.

vamsi
vamsi

வாரிசு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தளபதி விஜய் தமிழை தாண்டி தெலுங்கிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளார் தற்பொழுது தளபதி 66 என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் பணியாற்றி வருகிறார் இந்த திரைப்படத்தை தில் ராஜு  தயாரித்து வருகிறார் படத்திற்கு வாரிசு என பெயர் வைத்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தை  தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வம்சி அவர்கள்தான் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது அதுமட்டுமில்லாமல் செகண்ட் லுக் மற்றும் மூன்றாவது போஸ்டர் என ஒவ்வொரு நாளும் ஒரு போஸ்டரை வெளியிட்டு வந்தார்கள் படக்குழு. இந்தநிலையில் இசையமைப்பாளர் தமன் இசை அமைக்கும் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இசையமைப்பாளர் தமன் தன்னுடைய அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒரு சுவாரஸ்யமான புதுவிதமான தகவலை பகிர்ந்துள்ளார். வாரிசு திரைப்படத்தின் இசை அமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது எனவும் இயக்குனர் வம்சி மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, பிரபு பிரகாஷ்ராஜ் என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள் முழுக்க முழுக்க இந்த திரைப்படம் குடும்ப பங்காகனா திரைப்படமாக கூறப்படுகிறது அது மட்டுமே இல்லாமல் ஆக்ஷன் காட்சிகள் காமெடிகள் என அனைத்தும் இந்த திரைப்படத்தில் இடம்பெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் 2002 இல் வெளியான யூத் திரைப்படத்தில் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடலான ஆல்தோட்ட பூபதி பாடலை ரீமிக்ஸ் செய்ய முடிவு செய்துள்ளார் தமன் அதனால் வாரிசு திரைப்படத்தில் ஆல்தோட்டபூபதி  பாடல் ரீமிக்ஸ் கண்டிப்பாக வெளியாகும் அதுமட்டுமில்லாமல் 20 வருடத்திற்கு முன்பு எப்படி செய்ததோ அதே போல் விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் யூத் படத்திற்கு இசையமைத்த மணிஷர்மா வழிகாட்டியாகவும் ரீமிக்ஸ் மூலம் அவரை கவுரவைப்பர் என கூறப்படுகிறது.