வாரிசு படத்தை சீரியல்களுடன் ஒப்பிட்டு கலாய்த்த ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்த வம்சி.!

varisu
varisu

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருவர் தளபதி விஜய். இவர் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து  தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் குடும்பப் படமாக அமைந்தது.

ரசிகர்களை தாண்டி பொதுமக்களுக்கு இந்த திரைப்படம் ரொம்பவும் பிடித்திருந்ததால் தற்பொழுது வரை நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதால் வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என படக்குழு நம்பி இருக்கிறது.

வாரிசு திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடினாலும் விஜய் ரசிகர்களுக்கு சற்று இது பிடிக்கவில்லை ஏனென்றால் தளபதி விஜய் தொடர்ந்து ஆக்சன் படங்களில் மிரட்டி வந்த நிலையில் வாரிசு திரைப்படம் இப்படி ஒரு குடும்ப கதையாக இருந்ததால் பலரும் சீரியல்களுடன் ஒப்பிட்டு பேசி வந்தனர்

இப்படி இருக்கின்ற நிலையில்  படத்தின் இயக்குனர் வம்சி இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால். படம் எடுப்பது சுலபமான காரியம் அல்ல.. அது ஜோக் கிடையாது. Filmmakkers பல விஷயங்களை தியாகம் செய்கின்றனர். சீரியலை ஏன் டீ கிரேட் பண்ணுகிறீர்கள்.

மாலை நேரத்தில் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது சீரியல்தான் என கூறியிருக்கிறார் விஷயத்தை கேட்ட விஜய் ரசிகர்கள் நீங்கள் கொடுத்த பதில் சிறப்பு எனக்கூறி இயக்குனர் வம்சிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.ஆனால் ஒரு சில ரசிகர்களும் அதற்கு எதிர்மறையான விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.