காட்டேரி என்றால் செல்வராகவந்தான் ஆனால் மணிரத்தினம் வேற லெவல்.! மேடையிலேயே பேசி அதிர வைத்த பிரபலம்.!

mani-ratnam-vs-selvaraghavan
mani-ratnam-vs-selvaraghavan

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் மணிரத்தினம் மட்டுமல்லாமல் படத்தில் நடித்த பல பிரபலங்கள் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பொன்னியின் செல்வன் பட குழுவினர் கலந்து கொண்டார்கள்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ள கார்த்தி ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி பேசினார். செல்வராகவன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன் இந்த திரைப்படத்தின் மேக்கிங் பட்டையை கிளப்பியது என அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் கார்த்தி மற்றும் பார்த்திபன், ரீமாசன், ஆண்ட்ரியா, ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

கார்த்தி இந்த திரைப்படத்தில் சோழ தூதுவனாக நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் வெளியான பொழுது எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை என்றாலும் இப்பொழுது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது இந்த நிலையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வெளியாகும் என செல்வராகவன் கூறியது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொன்னியின் செல்வன் மணிரத்தினம் ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவன் ஆகியோர் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டு உள்ளார்கள் பத்திரிக்கையாளர். அதற்கு கார்த்தியும் பார்த்திபனும் பேசினார்கள் அவர்கள் பேசுகையில் செல்வராகவன் மணிரத்தினம் இருவரையும் கம்பேர் பண்ணும் பொழுது செல்வராகவன் ஒரு அசுரத்தனமான காட்டேரி வேற லெவல் ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் செல்வராகவன் யோசித்துக் கொண்டே இருப்பார் திடீரென கார்த்தியின் தேவைக்கேற்றவாறு ஷாட்டை மாற்றுவார்.

அதுமட்டுமில்லாமல் நைட் ரெண்டு மணிக்கு எழுப்பி டான்ஸ் ஆட சொல்லுவார் அதனால் செல்வராகவனையும் மணிரத்தினத்தையும் கம்பேர் பண்ணவே முடியாது என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய கார்த்தி மற்றும் பாரதிபன் செல்வராகவனை விட மணிரத்தினம் வேற மாதிரியான ஸ்டைலில் படம் எடுப்பார் ஒவ்வொரு சீனும் எப்படி இருக்க வேண்டும் என்பதில் மணிரத்தினம் தெளிவாக இருப்பார்.

மணிரத்தினம் சொன்னா குதிரை கூட நாலு ஸ்டெப் பின்னாடி போகும் அதனால் மணிரத்தினத்தையும் செல்வராகவனையும் கம்பேர் பண்ணவே முடியாது இரண்டு பேருமே பெஸ்ட் தான் என கார்த்தியும் பார்த்திபனும் பேசினார்கள் இவர்கள் பேசறது பார்த்தால் பொன்னியின் செல்வன் திரைப்படம் வேற லெவல்ல இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்களுடைய அதிகரித்துள்ளது.