தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா இவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் திருமணம் நடைபெற்றது திருமணத்திற்கு பிறகு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
எப்பொழுது திருமணம் முடிந்ததோ அதிலிருந்து இதுவரை மார்க்கெட் படிப்படியாக குறைய தொடங்கியது அதேபோல் நயன்தாரா கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் அன்னபூரணி, இறைவன் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.
அதேபோல் அட்லி மூலம் பாலிவுட்டில் கால் தடம் பதித்தார் ஜவான் திரைப்படத்தின் மூலம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும் பெரிதாக இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை இந்த நிலையில் அடுத்ததாக தி டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய திரைப்படங்களில் கமிட் ஆகிய நடித்து வருகிறார்.
இந்தியாவில் அழகு சாதன பொருட்கள் முதல் சானிட்டரி நாப்கின் வரை விற்பனை செய்து வரும் நயன்தாரா கனடா நாட்டிலும் தன்னுடைய கடையை திறந்து விட்டார் அதனை இன்ஸ்டாகிராமில் அதிரடியாக அறிவித்தார். மேலும் நடிகை நயன்தாரா கே ஜி எஃப் நடிகர் யாசுக்கு சகோதரியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என தகவல் கிடைத்தது .
அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட வல்லவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சில தகவலை பகிர்ந்துள்ளார் அதில் நயன்தாராவை வல்லவன் திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று சிம்பு கூறினார். ஆனால் நான் ஒரு திரைப்படத்தில் நயன்தாராவை நடிக்க கமிட் செய்திருந்தேன் அப்பொழுது 6 லட்சம் பேசி இருந்தேன் எனக்கூறி இருந்தார்.
அதற்காக இரண்டு லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இருந்தாராம் அதனால் அந்த அட்வான்ஸ் காசு வீணாகி விடக்கூடாது என்பதற்காக வல்லவன் திரைப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்ததாக தென்னப்பன் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் வல்லவன் திரைப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா வெறும் 6 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார் ஆனால் இன்று கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.