அடிபட்டகாயங்களுடன் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த தல அஜித்.! மாஸ் அப்டேட்

ajith news
ajith news

தல அஜித் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் மிகவும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்,  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் என அனைத்தையும் எடுக்கப்படும் முடிவு செய்து எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியது ரசிகர்களிடைய அஜித் மீது மரியாதையை ஏற்படுத்தி உள்ளது.

தல அஜித் ஸ்டன்ட் காட்சியில் மின்னல் வேகத்தில் வரும் போது நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தது விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் விழுந்த பின்னர் எழுந்து பார்த்த பொழுது கை கால் முதுகு என அனைத்து இடங்களிலும் ரத்தம் சொட்டி உள்ளது.

ஆனாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இரண்டு நாட்கள் அங்கேயே இருந்து மொத்த படப்பிடிப்பையும் முடித்து கொடுத்த பிறகுதான் சென்னை வந்துள்ளாராம் தல அஜித்.

இந்த தகவல் தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அதுமட்டுமில்லாமல் தல அஜித்தை பிடிக்காதவர்களுக்கும் கூட தற்பொழுது பிடித்துவிட்டது. அஜித்தின் இந்த செயலைப் பார்த்து.