ajith valimai : தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் தயாரித்து வருகிறார்.
வலிமை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்து வருகிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ஹிமா குரோஷி ஹீரோயினாக நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயா நடித்து வருகிறார் மேலும் யோகி பாபு காமெடியனாக இணைந்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்றும் படத்தில் சண்டைக்காட்சிகளும், பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என கூறப்படுகிறது, வலிமை திரைப்படத்திலிருந்து இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரபூர்வமாக வெளியாக வில்லை அதனால் ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.
அதேபோல் கொரனோ தோற்றால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதால் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது இந்நிலையில் தற்போது படப்பிடிப்பை நிபந்தனைகளுடன் தொடங்கலாம் என அரசு அறிவித்துள்ளது அதனால் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள் படக்குழு.
இந்த நிலையில் வலிமை திரைப் படத்தின் பல காட்சிகள் டெல்லியில் எடுப்பதற்காக திட்டமிட்டிருந்தார்கள், இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் காட்சிகள் டெல்லியில் படக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, என்னதான் போனிகபூர் மிகப்பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் டெல்லியில் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி தராதது மிகப்பெரிய வருத்தத்தை அளித்துள்ளது.
அதனால் படபிடிப்பை வேறு எங்கு எடுக்கலாம் என திட்டமிட்டு வருகிறார்கள்.
இதனைக் கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் அஜித் திரைப்படத்திற்கு அனுமதி மறுப்பா என அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். இதனால் ரசிகர்களும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.