தொலைக்காட்சியில் வெளியாகி TRP – யில் உச்சத்தை தொட்ட வலிமை.! வெளிவந்த தகவல்.

அஜித் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம்  வலிமை. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் சென்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்பங்களை வெகுவாக கவர்ந்திருந்தது இதனால் நாளுக்கு நாள் இந்த படத்தை பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

ஆரம்பித்த நாளில் இருந்து படத்தின் வசூல் அதிகரித்தது கடைசிவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்து ஒரு புதிய சாதனை படைத்தது அதனை உறுதிப்படுத்தும் வகையில் வலிமை படத்தை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வலிமை படம் 200+ வசூலை அள்ளி உள்ளதாக கூறினார்.

வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் கைகோர்த்து ஹுமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா, யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ் மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தியுள்ளனர். வலிமை திரைப்படம் ஒரு மாதம் கழித்து ஜீ  தமிழ் OTT தளத்தில்  வெளியாகி அங்கேயும் வெற்றிநடை கண்டது.

பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றிலும் ஒளிபரப்பப்பட்டது அங்கேயும் நல்ல வரவேற்பை கொண்டுள்ளது.

டிஆர்பி -ல் தெலுங்கில் 3.17 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளது. இந்த செய்தியை தற்போது இணையதள பக்கத்தில் பதிவிட்டு அஜீத் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version