10ஆயிரம் சதுர அடி பிரமாண்ட போஸ்டருடன் வலிமை திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு.!

valimai-

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய வலிமை திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காக பத்தாயிரம் சதுர அடி போஸ்டரை வைத்து படக்குழு அறிவித்துள்ளது.

அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் ஹீமா குரோஷி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாக்கிய வலிமை உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. மேலும் இதனை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள் இந்த நிலையில் வலிமை திரைப்படம் வருகின்ற 25 ஆம் தேதி OTT இணையதளமான ஜீ 5  இணையதளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை மிகவும் பிரம்மாண்டமாக அறிவிப்பதற்காக படக்குழு சென்னையில் ஒய் எம் சி ஏ மைதானத்தில் பத்தாயிரம் சதுர அடி போஸ்டர் மூலம் ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது இந்த பிரம்மாண்ட போஸ்டரின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எந்த ஒரு திரைப்படத்திற்கும் இவ்வளவு பெரிய போஸ்டர் மூலம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது இல்லை அந்த வகையில் திரைப்படத்திற்கு மிகப்பெரிய செலவில் இவ்வளவு பெரிய போஸ்டர் வைத்து அறிவித்துள்ளது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

valimai poster
valimai poster