தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தல அஜித். பொதுவாக அஜித் சினிமாவையும் தாண்டி துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் உட்பட இன்னும் பலவற்றிலும் ஆர்வமுடையவர் எனவே தற்போது உள்ள இளைஞர்களின் ரோல் மாடலாக அஜித் திகழ்கிறார்.
இந்நிலையில் அஜித் நடிப்பில் எந்த படம் வெளியானாலும் அத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று விடும். இந்நிலையில் கடைசியாக தல அஜித் நடிப்பில் நேர்கொண்டபார்வை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்பொழுது வரையிலும் அஜித் நடிப்பில் ஒரு வருடங்களாக எந்த படமும் வெளி வராததால் ரசிகர்கள் மிகவும் ஏக்கத்தில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் வலிமை திரைப்படத்தில் இவர் ஒரு ஆண்டுக்கு மேலாக நடித்து வருகிறார். ஆனால் இந்த அப்டேட் வராத காரணத்தினால் ரசிகர்கள் எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று போராடி வந்தார்கள்.
அந்த வகையில் இத்திரைப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரா குரோஷி நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் கொரோனா காலத்திலும் பாதுகாப்புடன் மிகவும் விறுவிறுப்பாக வலிமை திரைப்படத்தின் படம் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மே 1ம் தேதி அஜித்தின் 50 பிறந்த நாளை முன்னிட்டு வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது
இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படம் பிடிப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல உள்ளார்களாம். இது தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாக ஆகிவருகிறது .