Valimai update : அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிப் படங்களாக அமைந்தது. இதனை அடுத்து அஜீத் தன்னுடைய அறுபதாவது திரைப்படமாக வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார் இது திரைப்படத்தை வினோத் அவர்கள் இயக்கிவருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அதேபோல யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில் இன்னும் மீதமுள்ள படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுவரை அஜித் திரைப்படத்தின் அப்டேட் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் நாளை அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் எதாவது அப்டேட் கொடுப்பார்கள் என மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் போனி கபூரை அதிரடியாக ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியதாவது கோவிட் 19 என்னும் கொரோனா என்கின்ற கொடிய நோயின் தாக்கத்தில் அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும், இந்த தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்திற்கும் எந்த விதமான விளம்பரம் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர் மற்றும் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கலந்து ஆலோசித்து ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம் நாம் நலம் காப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
#StayHomeStaySafe pic.twitter.com/QnLMeOk8JJ
— Boney Kapoor (@BoneyKapoor) April 30, 2020