Valimai Update : தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் மீண்டும் அஜீத்தை வைத்து வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தை தயாரித்து வருகிறார், இந்த திரைப்படம் அஜித்திற்கு அறுபதாவது திரைப்படம், படத்தை சதுரங்க வேட்டை தீரன்அதிகாரம்ஒன்று ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் வினோத் எழுதி இயக்கி வருகிறார் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஹைதராபாத்தில் நடைபெற்றது பின்பு சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது, இந்த நிலையில் படத்தின் முக்கிய காட்சிகளை ஜார்ட்டன் நாட்டில் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் தற்காலிகமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு அப்டேட்கள் ஏதாவது ஒன்று வெளிவந்த வண்ணம் இருக்கிறது, ஆனால் தல அஜித்துக்கு மட்டும் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது அதனால் ரசிகர்கள் தவமாய் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரிடம் இருந்து அதிகாரபூர்வ அப்டேட் கிடைத்துள்ளது.
வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு முன்னணி பத்திரிகை நிறுவனத்திற்கு சமீபத்தில் பேட்டியில் பேசினார் அப்பொழுது அஜித் குமார் தனது அறுபதாவது படமாக நடிக்கும் வலிமை திரைப்படம் ஒரு பெரிய அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது திரைப்படத்தின் படப்பிடிப்பை 50% முடிந்து விட்டதாக கூறினார் அந்த பேட்டியில்.
அதுமட்டுமில்லாமல் அனைவரும் ஆரோக்கியத்திற்காக முன்னுரிமை கொடுத்து கொரனோ நோய்த்தொற்று முடிவடைந்த பிறகு தான் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க வேண்டும் என அஜித் கேட்டுக் கொண்டதாக அந்த பேட்டியில் போனி கபூர் கூறியுள்ளார். இந்த நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் பேன் மேட் போஸ்டரை கிரியேட் செய்து ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
மேலும் வலிமை திரைப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் யோகி பாபு, கார்த்திகேயா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிக்கத்தக்கது.
Fan made #Valimai Poster ! #BoxOfficeBaashaAJITH pic.twitter.com/feX0cDsjGI
— MASS AJITH (@MASSAJITH) May 28, 2020