வலிமை திரைப்படத்தில் வீலிங் செய்த அஜித்!! வைரலாகும் புகைப்படம்..

ajith
ajith

thala ajith wheeling photo from valimai  movie: தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் தான் தல அஜித் இவரது நடிப்பில் சென்ற வருடம் விசஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரையரங்குகளில் வெளியானது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையிலும் நல்ல வசூல் ஆகி இருந்தது.

மேலும் தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தல அஜித் இந்த படத்தை முழுமையாக முடித்து கொடுத்துவிட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

வலிமை திரைப்படத்தில் இருந்து ஏதாவது ஒரு அப்டேட் கிடைக்குமா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் அதிகமாக உள்ளதால் அதிலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை தல அஜித் வீலிங் செய்யும் போது எடுத்த புகைப்படமாக இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் தல அஜித் வேற லெவல் என்று கமெண்ட் அடித்து வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை சமூக வலைதளபக்கங்களில் லைக் சேர் பகிர்ந்து இருக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.