சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வினோத் இவர் இயக்கிய முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது அதனால் இவரை தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். இதனைத்தொடர்ந்து அடுத்ததாக ‘தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தை கார்த்திக் அவர்களை வைத்து இயக்கினார்.
இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இந்த இரண்டு திரைப்படங்களின் வெற்றியைப் பார்த்த தமிழ் சினிமா பிரபலங்கள் இவரை வியந்து பார்த்தார்கள். இந்த நிலையில் அடுத்ததாக போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் வெற்றி பெற்றதால் அடுத்ததாக மீண்டும் இதே கூட்டணியில் அஜித் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் கதை இந்திய திரை உலகில் இதுவரை யாரும் எடுக்காத கதை என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ நேற்று இணையதளத்தில் வெளியானது அதில் வில்லன் கார்த்திகேயா சாத்தான் ரைடர் என்று வசனம் கூறுவார். இந்த சாத்தான் ரைடர்ஸ் என்பவர்கள் அமெரிக்கா, ஜெர்மனி ,இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஹிட்லரின் அடிமைகள் என்றும் பைக் ரைட்கலை வைத்து இவர்கள் பல குற்றங்களை செய்து வருவார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இப்படி இருக்கும் சாத்தான் ரைடர்களை ஒழிப்பதற்காக உலகில் பல நாடுகளில் தனிப்படை போலீசார்களை அமைத்து ஓரளவு கட்டுப்படுத்தினார்கள் ஆனாலும் இன்னும் ஒரு சில குழுக்கள் மறைமுகமாக செயல்பட்டு வருவதாகவும் அவ்வாறு செயல்படும் குழுக்களின் கதைதான் இந்த வலிமை திரைப்படத்தின் கதை என கூறப்படுகிறது.
இந்த சாத்தான் ரைடர்ஸ் பைக் மூலம் கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் என அனைத்திலும் ஈடுபடுவார்கள் என்றும் அவர்களை பிடிக்கும் சர்வதேச போலீஸ் அதிகாரியாக தல அஜித் அவர்கள் நடித்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது இந்த சாத்தான் ரைடர்ஸ் மிகவும் ஆபத்தானவர்கள் அவர்கள் சர்வதேச போலீஸ் அதிகாரிகளால் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்து வருகிறார்கள்.
தமிழ் திரை உலகிற்குனர்கள் மட்டுமல்லாமல் இந்திய திரைஉலக இயக்குனர்கள் யாரும் தொடாத வித்தியாசமான கதைகளை வினோத் அவர்கள் எடுத்துள்ளார். அதனால் இந்த திரைப்படம் உலக அளவில் பிரபலமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.