தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் நடிகர் அஜித் இவரை தல அஜித் என அவருடைய ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் விசுவாசம் திரைப்படத்தில் நடித்ததன் பிறகு வேறு எந்த ஒரு திரைப்படமும் இவருடைய நடிப்பில் வெளியாக வில்லை.
அந்த வகையில் சுமார் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பிலிருந்து தற்போதுதான் திரைக்கு தயாராகியுள்ள திரைப்படம் என்றால் அது வலிமை திரைப்படம் தான். இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் வினோத் அவர்கள் தான் இயக்கியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தை போனி கபூர் அவர்கள் தயாரித்த அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பாகவே போனி கபூர் மற்றும் வினோத் அஜித் என நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள்.
இவ்வாறு நேர்கொண்ட பார்வையும் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுக்கும் எதிர்பார்க்கப்படும் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படமானது முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்த திரைப்படமானது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிடலாம் என முதலில் படக்குழுவினர்கள் முடிவு செய்திருந்தார்கள் ஆனால் ரஜினியின் திரைப்படம் அன்று வெளி வருவதன் காரணமாக தல அஜித்தின் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியிடலாம் என முடிவு செய்துவிட்டார்கள்.
அந்த வகையில் திரைப்படமானது வருகின்ற ஜனவரி 13-ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகப் போகிறது என ரசிகர்கள் ஒரு தேதியை வெளியிட்டு அதனை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.