தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்துடன் கெத்தாக வலம் வருபவர் தான் தல அஜித் இவர் ஆரம்பத்தில் சொதப்பலான திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் தற்போது இவரை மிஞ்ச யாருமே கிடையாது. அந்த அளவிற்கு தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டி வகிக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தான் இவர் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர்க்கான வேலை மிக விருவிருப்பாக நடந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் தற்போது வெறும் பத்து நாட்கள் படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளதாம் அந்தவகையில் இந்த படப்பிடிப்பு ஆனது ஸ்பெயின் நாட்டில் படமாக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தின் காரணமாக படக்குழுவினர்கள் ஸ்பெயின் செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதற்கு முன்பாக வலிமை திரைப்படமானது 2022ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டது ஆனால் மோஷன் போஸ்டர் இன் 2021 ஆம் ஆண்டு வெளியாக போவதாக குறிப்பிட்ட தான் காரணமாக ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
அதாவது வலிமை திரைப்படமானது வருகின்ற அக்டோபர் மாதம் 14ஆம் தேதி சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை முன்னிட்டு அரசு விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என சமூக வலைதள பக்கத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.
பொதுவாக விடுமுறை நாட்களை முன்னிட்டு எந்த ஒரு திரைப்படமும் வெளிவராமல் இருக்கும் நிலையில் தனியாக களமிறங்கி thala அஜித் சாகசம் செய்வார் என சமூக வலைதள பக்கத்தில் பேசப்பட்டு வருவது மட்டுமல்லாமல் திரையரங்கில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுபவிப்பார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.