சினிமாவில் உள்ள ஏராளமான நடிகர்கள் வாரிசு நடிகர் நடிகைகளாக அறிமுகமாகி சினிமாவில் பிரபலமடைந்து இருந்தாலும் ஒரு அடிப்படை கலைஞராக படிப்படியாக சினிமாவில் உயர்ந்தவர்களும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் காமெடி நடிகர்களான செந்தில், கவுண்டமணி, வடிவேலு, யோகிபாபு இவர்களுக்கு அடுத்ததாக தற்பொழுது தனது எதார்த்த காமெடியினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள அவர்தான் நடிகர் புகழ்.
இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து அது இது எது நிகழ்ச்சியில் பெண் வேடத்தில் நடித்து வந்தார். இவ்வாறு பிரபலமடைந்து வந்த இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏராளமானவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது அந்த நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி.
இந்நிகழ்ச்சி இளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து கலக்கி வருகிறார்.
அந்த வகையில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார் என்பது உறுதியாகி உள்ளது. அஜித் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது ஆனால் இத்திரைப்படத்தினை பற்றி பெரிதாக எந்த தகவலும் தெரியாத காரணத்தினால் ரசிகர்களும் போகுமிடமெல்லாம் வலிமை அப்டேட்டை கேட்டு தொந்தரவு செய்து வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த சாதனையைப் பார்த்து புகழ் வலிமை திரைப்படத்தில் நடித்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்களும் இனிமேல் உங்களுக்கும் நல்லதே நடக்கும் என்று வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.