விஸ்வாசம் படத்தையே ஓரங்கட்டும் அளவிற்கு வலிமையில் ஒரு விஷயம் இருக்கிறது.! அது என்னவாயிருக்கும் குழப்பத்தில் ரசிகர்கள்.

valimai 21

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருபவர் தல அஜித். பொதுவாக சினிமாவையும் தாண்டி துப்பாக்கி சுடுதல்,பைக்ரேஸ் உட்பட இன்னும் சில நல்ல விஷயங்களில் அதிக ஆர்வம் உள்ளதால் தற்பொழுது உள்ள இளைஞர்களின் ரோல் மாடலாக திகழ்கிறார்.

அந்த வகையில் அஜீத் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது வரையிலும் இவர் நடிப்பில் எந்த திரைப்படமும்  வெளிவரவில்லை.ஏனென்றால் அஜித் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தன் கவனத்தை செலுத்தி வந்தார். அந்த வகையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு தங்கத்தையும் தட்டி சென்றார்.

இந்நிலையில் தற்பொழுது இவர் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தை H.வினோத் இயக்க போனிகபூர்  தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஹேமா குரோஷி  நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் பெரிதாக இதுவரையிலும் வெளி வராத காரணத்தினால் ரசிகர்கள் போகுமிடமெல்லாம் வலிமை அப்டேட் கொடுங்கள் என்று போராடி வருகிறார்கள்.அந்த வகையில் மே மாதம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.

ஆனால் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவராது என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில் தற்பொழுது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் எதிர்பாராத நிலையில் ஸ்பெஷல் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்கள்.

valimai update
valimai update

அதாவது வலிமை திரைப்படத்தில் அஜித் மிரட்டம் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார். அதோடு அம்மா, அண்ணன், தங்கை,மகன் என அதிக ஏமோஷனல் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம்.  விஸ்வாச திரைப்படத்தை விட வலிமை திரைப்படம் சூப்பராக இருக்கும் என்று கூறப்படுகிறது.