இரண்டே நாளில் இமாலய சாதனை படைத்த வலிமை.! உண்மையை வெளிப்படையாக அறிவித்த போனிகபூர்

boney kapoor
boney kapoor

தல அஜித் கடைசியாக வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார் இந்த திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி வலிமை திரைப்படம் OTTஇணையதளமான ஜீ5 இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிலையில்  24 மணிநேரத்தில் வலிமை திரைப்படம் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை பெற்று சாதனை பெற்றது. இந்த தகவலை கொண்டாடிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு தகவல் கொண்டாடுவதற்கு கிடைத்துள்ளது இந்தநிலையில் நாற்பத்தி எட்டு மணிநேரத்தில் மீண்டும் புதிய சாதனை படைத்துள்ளது வலிமை திரைப்படம்.

வலிமை திரைப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே 200 கோடி பாக்ஸ் ஆபிசில் இணைந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது இதனை தொடர்ந்து தற்பொழுது வலிமை திரைப்படத்தின் வசூல் 300 கோடியை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் நேற்று ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படம் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தாலும் இன்னும் வலிமை திரைப்படமும் ஒரு சில திரையரங்குகளில் திரையிட்டு தான் வருகிறார்கள் காரணம் மக்கள் கூட்டம் இன்னும் வந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் போனி கபூர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வலிமை திரைப்படத்தின் சாதனை பற்றி தகவலை அறிவித்துள்ளார்.

அதாவது வலிமை திரைப்படம் வெளியாகி 48 மணி நேரத்தில் 200 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை பெற்று  மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது OTT வரலாற்றிலேயே இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது இதனை போனிகபூர் சமூக வலைதளமான ட்விட்டரில் அறிவித்துள்ளார்.