கருப்பாக இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்று பயந்து இருக்கும் பலருக்கும் பாடம் கற்றுக் கொடுத்த நடிகை தான் சரண்யா ரவிச்சந்திரன். இவர் தன்னுடைய விடாமுயற்சியின் காரணமாகவும் கடின உழைப்பின் காரணமாகவோ தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாகி விட்டார்.
அதுமட்டுமில்லாமல் நடிப்புக்கும் நிறத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது என்பதை தெளிவாக ரசிகர்களிடையே வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது வலிமை திரைப்படத்தில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
இவ்வாறு இவர் இந்த இடத்திற்க்கு எளிதில் வரவில்லை இவர் திருச்சிக்கு அருகிலுள்ள கே கள்ளிக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அம்மா சித்தாள் வேலை செய்பவர் அதே போல அவருடைய அப்பாவும் ஒரு விவசாயி இவ்வளவு கஷ்டத்திலும் அவரைப் படிக்க வைக்க பல்வேறு தரப்பினரிடமும் கடன் வாங்கி உள்ளார்கள்.
இதன் காரணமாக படிப்பிற்கு வாங்கிய கடனை அடைக்கவும்ம் தன்னுடைய தம்பியை படிக்க வைக்கவும் படிப்பு முடிந்த கையோடு வேலை தேட ஆரம்பித்து விட்டார். இவ்வாறு திருச்சியிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வந்த நமது நடிகை தெருத்தெருவாக பொருட்களை விற்கும் வேலையை தான் ஆரம்பத்தில் செய்தாராம்.
அது மட்டுமில்லாமல் ஒரு கம்பெனியில் இருந்து மற்றொரு கம்பெனிக்கு மாறினால் 500 ரூபாய் அதிகமாக தருவார்கள் என்று அடிக்கடி தான் வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றிக் கொள்வாராம் அதுமட்டுமில்லாமல் இவர் வேலை செய்யும் இடத்திற்கு போகும் போது பூ மூக்குத்தி செருப்பு டிரஸ் என அனைத்தையும் பார்த்து பலரும் கிண்டல் செய்வது உண்டாம்.
ஆனால் இவருடைய பேச்சை மட்டும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் இதை பார்த்து அவருடைய நண்பர்கள் vj வாக ஆவதற்கு முயற்சி செய் என்று அவரிடம் அடிக்கடி சொல்வார் கலாம். இதன் காரணமாக அடிக்கடி நேர்காணலுக்கு சென்று கலந்து கொண்டார் ஆனால் உன் மூஞ்சில பல்லு மட்டும் தான் தெரியுது நீ எல்லாம் ஒரு தொகுப்பாளினியா என கிண்டல் அடிப்பார்கலாம்.
இப்படி பல்வேறு அசிங்கத்தையும் கடந்து வந்த நமது நடிகை சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு ஆரம்பத்தில் ஷார்ட் பிலிம் மேல் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதனை தொடர்ந்து காதலும் கடந்து போகும் இறைவி வடச்சென்னை போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த நமது நடிகை தற்போது அஜித்தின் வலிமை திரைப்படத்திலும் களமிறங்க உள்ளார்.