வலிமை படத்தால் வருத்தப்பட்ட வினோத்.! நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை தகவல்.!

h-vinoth
h-vinoth

வினோத் ரசிகர்களின் மனதை புரிந்து கொண்டு நல்ல திரைப்படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் அவர் இயக்கிய படங்கள் வெற்றி திரைப்படமாக அமைந்தது அந்த வகையில்  தீரன் அதிகாரம் ஓன்று திரைப்படத்தை இயக்கிய மாபெரும் வெற்றி கண்டார் அதனை தொடர்ந்து அஜித்தை வைத்து நேற்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை இயக்கினார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது மேலும் அந்த திரைப்படத்தை போனி கபூர் அவர்கள் தான் தயாரித்திருந்தார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வலிமை என்ற திரைப்படத்தை வினோத் அவர்கள் இயக்கினார். இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

என்னதான் வலிமை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வலிமை திரைப்படம் என்னுடைய கதை என மெட்ரோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வலிமை படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது வழக்குதொடர்ந்தார். அதற்கு விளக்கம் அளித்த வலிமை திரைப்படத்தின் இயக்குனர் வினோத் இந்த படத்தின் கதை அன்றாட நிகழ்வுகளில் நடந்த சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது என விளக்கம் கொடுத்தார்.

வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தற்பொழுது திடீரென மெட்ரோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது  ஆனால் இந்த தகவல் சமூக வலைதளத்திலும் வெளியாகவில்லை. எப்படியோ இந்த தகவல் எச் வினோத் அவர்களுக்கு சென்றுள்ளது இதை தெரிந்து கொண்டா வினோத் படத்தின் கதை என்னுடையது என பலமுறை சமூக வலைதளத்தில் பேட்டி கொடுத்தார்களே இப்பொழுது வாபஸ் வாங்கியதை மட்டும் ஏன் கூறாமல் இருக்கிறார்கள்.

என வினோத் அவர்கள் வருத்தப்பட்டு பேசி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது  அது மட்டும் இல்லாமல் இதனை வினோத் அவர்கள் மீடியாவில் கூறாமல் இருக்கிறார் அதற்கு காரணம் அவர்களை பெரிய ஆளாக ஆக்கி விடக்கூடாது என நினைக்கிறாரோ என்னமோ  என இணையதள வாசிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.