வலிமை மீது கேஸ் போட்ட தயாரிப்பாளருக்கு H.வினோத் கொடுத்த மொரையான பதிலடி.! யாரும் எதிர்பார்க்காத தகவல்

valimai
valimai

நடிகர் அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வலிமை திரைப்படத்தின் கதை மெட்ரோ திரைப்படத்தின் கதை போல் இருப்பதாகக் கூறி  மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஆனந்த் கிருஷ்ணா வழக்கு ஒன்றை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்தார்.

அதுமட்டுமில்லாமல் வலிமை திரைப்படத்தை வெளியிடக்கூடாது எனவும் OTT யில் அனுமதிக்கக் கூடாது எனவும் அதிரடியாக மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.  இந்த நிலையில் திட்டமிட்டபடி 25ஆம் தேதி நாளை வலிமை திரைப்படம் OTT இணையதளமான ஜீ 5  ல் வெளியாக இருக்கிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்பொழுது வலிமை திரைப்படத்தின் மீது வழக்கு போட்ட மெட்ரோ படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் மீது பொய்யான வழக்கு போட்ட மெட்ரோ தயாரிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர இருப்பதாக வலிமை படத்தின் இயக்குனர் வினோத் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மேலும் வினோத் கூறியதாவது வலிமை திரைப்படம் முழுக்க முழுக்க தினசரி செய்திகளில் வெளியாகியுள்ள தகவலை பொருத்து உருவானது என்றும் தன் மீது வீண்பழி சுமத்திய தயாரிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.