அஜித்தின் வலிமை திரைப்படம் இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரையரங்கிற்கு வந்துள்ளது. இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டது ரசிகர்களின் காட்சி என்பதால் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை கொண்டாடினார்கள். மேலும் பாலாபிஷேகம், கட்டவுட் என அமர்க்களப்படுத்தி னார்கள்.
இந்த நிலையில் வலிமை திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டும் என பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். வலிமை திரைப்படத்தை ஹச் வினோத் தான் இயக்கியிருந்தார் போனிகபூர் தயாரித்திருந்தார். வலிமை திரைப்படம் கடந்த வருடமே வெளியாக வேண்டியது ஆனால் கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு நடைபெறாததால் படம் தாமதமாக வெளியானது.
இரண்டு வருடங்களாக எந்த ஒரு அப்டேட் வெளியாகாத நிலையில் படக்குழு கடைசி நேரத்தில் அனைத்து அப்டேட் கலையும் வீசினார்கள். இந்த நிலையில் வலிமை திரைப்படம் நேற்று வெளியானது இதற்கு பல தரப்பு மக்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். வலிமை படத்திற்கு நேர்மையான கருத்துக்கள் வந்தாலும் சில எதிர்மறையான கருத்துக்களும் வந்து கொண்டேதான் இருக்கிறது.
முதல் பாதி ஹாலிவுட் திரைப்படம் போல் மிகவும் விறுவிறுப்பாக சென்றது எனவும் இரண்டாவது பாதி செண்டிமெண்ட் வைத்து வினோத் ரசிகர்களை கவலைப்பட வைத்துவிட்டார். இந்த நிலையில் பயில்வன் ரங்கனதன் அவர்கள் வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தை பார்த்தால் வலிமை படம் அப்படியே இருக்கும் என கூறியுள்ளார்.
அதாவது வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தின் காப்பி தான் வலிமை என அப்பட்டமாக கூறியுள்ளார் பி வாசு இயக்கத்தில் சத்யராஜ், சுகன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வால்டர் வெற்றிவேல் இந்த திரைப் படத்தில் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடித்தார் அதே போல் வலிமை திரைப் படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.
வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தில் அப்பாவி போல் தம்பி இருந்துகொண்டு வில்லனாக நடித்து இருப்பார் அதேபோல் வலிமை திரைப்படத்திலும் அஜித்தின் தம்பி வில்லனாக நடித்துள்ளார் இரண்டு திரைப்படங்களின் கதையும் ஒரே மாதிரியாக இருந்தாலும் காட்சிகள் மட்டும் வேறு விதமாக இருக்கிறது எனவும் வலிமை திரைப்படத்தில் அதிக ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளது எனவும் கூறியுள்ளார்.
வால்டர் வெற்றிவேல் திரைப்படத்தை இப்பொழுது உள்ள ட்ரெண்டிற்கு h வினோத் அவர்கள் எடுத்துள்ளார். என மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன் இவர் கூறியதை கேட்ட அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.