valimai movie fan created teaser released by actress nazriya video viral: அஜித் தற்பொழுது எ.ச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹாய்தராபாத்தில் செட் போட்டு அங்கு படக்காட்சிகள் எடுத்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பினார் தல அஜித்.
மேலும் இந்த படத்தை பற்றி ஏதாவது ஒரு அப்டேட் வருமா என பல ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களை சமூக வலைதள பக்கங்களில் டார்கெட் செய்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தல அஜித்தின் ரசிகரான எக்ஸ் பிரஷன் குயின் நஸ்ரியா வெறித்தனமான அஜித் ஃபேன் ஆவார்.
இவர் அஜித்தை பற்றி எந்த ஒரு புகைப்படம் அல்லது வீடியோ காணொளி வந்தாலும் அதை எடுத்து உடனுக்குடன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவார்.
மேலும் தல அஜித்தின் தீவிர ரசிகரான ஒருவர் வலிமை படத்தின் டீசர் இப்படி தான் இருக்கும் என்று உருவாக்கிய வீடியோ காணொளியை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார் நஸ்ரியா.
நஸ்ரியா வெளியிட்ட அந்த வீடியோ காணொளி பார்ப்பதற்கு வலிமையை படத்தின் உண்மையான டீசர் போலவே காட்சியளிக்கிறது. இந்த வீடியோ காணொளி யூடியூபிலும் வைரலாகி வருகிறது.