அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் இதற்கு கலவையான விமர்சனங்களை கொடுத்தார்கள் இருந்தாலும் இந்த கலவையான விமர்சனங்கள் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் வலிமை திரைப்படத்தில் ஹீமா குரோஷி, கார்த்திகேயா, சுமித்ரா, புகழ் சைத்ரா ரெட்டி என பல முக்கிய பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த திரைப்படம் வெளியானதிலிருந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் நல்ல வசூல் கிடைத்தாலும் ஒரு சில இணையதள வாசிகள் அதனை வசூல் செய்யவில்லை என கூப்பாடு போட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் ஒருவர் வலிமை திரைப்படம் மிகப்பெரிய திரைப்படம், கலெக்ஷன் இல்லை என்று சொல்றாவங்க அவங்க சொல்லிட்டு போறாங்க அதனால் நமக்கு என்ன கவலை கலெக்ஷன் இல்லை என்று சொல்வதற்கு ஒரு குரூப் சுற்றிக்கொண்டிருக்கிறது.
எங்களைப் பொறுத்தவரையில் வலிமை திரைப்படம் கமர்சியல் ஹிட் திரைப்படம் தான், விமர்சனங்களைப் பற்றி கவலையே கிடையாது நல்லாயிருக்கு என்று விமர்சனம் செய்த திரைப்படங்கள் எதுவும் ஓடியது கிடையாது என திரையரங்க உரிமையாளர் அதிரடியாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் வலிமை திரைப்படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல வசூலை பெற்று கொடுத்துள்ளது என்பது தற்போது தெரிய வந்துள்ளது இந்த நிலையில் வலிமை திரைப்படம் 200 கோடி பாக்ஸ் ஆபீஸில் இணைந்து விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.