தல அஜித் கடைசியாக நடித்த இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன, இந்த நிலையில் தல அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தல அஜித் தான் நடிக்கும் திரைப்படத்தில் அதிக சென்டிமென்ட் காட்சிகள் வைத்து எடுக்கப்பட்டு வருகிறது அதே போல் ரசிகர்களை மட்டும் கவராமல் பொதுமக்களையும் கவர வேண்டும் என்பதற்காக குடும்பக் கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ஒருகாலத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வந்த அஜீத் தற்பொழுது குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார், அந்த வகையில் வீரம் வேதாளம் விசுவாசம் ஆகிய திரைப்படங்களில் ஏதாவது ஒரு சென்டிமெண்ட் காட்சி பொதுமக்களை கவர்ந்ததால் தான் நடிக்கும் திரைப்படத்தில் ஏதாவது ஒரு சென்டிமெண்ட் காட்சி இருக்கவேண்டுமென உறுதியாக இருக்கிறார்.
அஜித் நடித்த வீரம் திரைப்படத்தை போல் வலிமை திரைப்படத்திலும் தம்பி சென்டிமென்ட் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, வலிமை திரைப்படம் அதிரடி ஆக்சன் திரைப்படமாக இருந்தாலும் செண்டிமென்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் வலிமை திரை படத்தில் அஜித்திற்கு தம்பியாக 80களில் பிரபலமான நடிகரான பானுசந்தர் மகன் ஜெயந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, அதேபோல் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரும் நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது. valimai திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருப்பதால் பொங்கல் ரிலீஸ் தள்ளிப் போகும் என கூறப்படுகிறது.