வலிமை திரைப்படத்தில் அஜீத்துக்கு காயம் துடியாய் துடிக்கும் ரசிகர்கள் என்னாச்சு தெரியுமா.!

thala-ajith
thala-ajith

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை இந்த  படம் ஆரம்பித்த  நாளிலிருந்தே கொரோனா என்ற பிரச்சினைனால்  படம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள்.

மேலும் வலிமை திரைப்படத்திலிருந்து ஒரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு தரவில்லை எனில் ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் அப்டேட் கொடு என தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களிடம் கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஐதராபாத்தில் சண்டை காட்சிகளில் தல அஜித் நடித்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு காயம் ஏற்பட்டது.

மேலும் அந்த காயத்தோடு அன்றைய சூட்டிங்கை வெற்றிகரமாக முடித்தார் தல அஜித்.

அஜித்திற்கு காயம்பட்டது ரகசியமாக படக்குழுவினர்கள் ரசிகர்களுக்கு தெரியாமல் வைத்திருந்தார்கள் இந்நிலையில் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் முடிவடைந்து விட்டதால் வலிமை படக்குழுவினர்களிடம் இருந்து இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் தல அஜீத்தின் ரசிகர்களுக்கு சமூக வலைதள பக்கங்களில் இந்த தகவல்கள் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் அஜித்திற்கு என்ன ஆயிற்று என்று ரசிகர்கள் பலரும் துடித்து வருகிறார்கள்.