valimai : தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை போனிகபூர் தான் மிகவும் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்காள் படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது, இந்த படப்பிடிப்பில் அஜித், ஹீமா குரோஷி, யோகிபாபு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
வலிமை திரைபடம் தொடங்கியதில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் எப்பொழுது அப்டேட் வரும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ட்விட்டர் சமூகவலைதளத்தில் அஜித்தின் வலிமை திரைப்படத்திலிருந்து #ஈஸ்வரமூர்த்திஐபிஎஸ் என்ற ஹேஸ் டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
வலிமை திரைப் படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே நாம் பார்த்திருப்போம் இந்த நிலையில் அஜீத் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் ஈஸ்வரமூர்த்தி என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.
அதனால் சமூகவலைதளத்தில் இதை ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகிறார்கள், வலிமை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்து வருகிறார் ஏற்கனவே தீம் மியூசிக் 3 பாடல்கள் முடித்து விட்டதாக அவரே கூறியிருந்தார், இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் அஜித்தின் கெட்டப் ஆகியவற்றை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.