தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் அவர்கள் தற்பொழுது வலிமை படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை ஹெச் வினோத் அவர்கள் இயக்கி வருகிறார். போனி கபூர் அவர்கள் இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் பைக் மற்றும் கார் ரேஸ் ஆகியவை எடுக்கப்பட்டு வருகின்றன என சமீபத்தில் தகவல் கிடைத்தன. இந்த நிலையில் அஜித் அவர்களுக்கு படபிடிப்பின் பொழுது விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அஜித் அவர்கள் வலிமை படத்தில் ரிஸ்கான காட்சிகளை யார் சொல்லியும் கேட்காமல் டூப் போடாமல் நடித்து வந்தார் அதனால் தற்பொழுது அவருக்கு விபத்து ஏற்பட்டு, சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அந்த காயத்துடன் அஜித் அந்த காட்ச்சிகளை நடித்து முடித்து கொடுதுல்லாரம், அஜித்தின் சிறு காயதிர்க்கே ரசிகர்கள் சற்று சோகத்தில் உள்ளனர். மேலும் தல ரசிகர்கள் மிகப்பெரிய ரிஸ்க்கான சாட்டுகளை அஜித் அவர்கள் எடுக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்கள். அதுமட்டும் இல்லமல் அடிபட்ட காயம் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டிகொள்கிறார்கள்.
மேலும் ரசிகர்கள் கூறியது மிகப்பெரிய ரிஸ்க்காண காட்சிகள் எடுத்தால் எங்களுக்கு பயமாக உள்ளது எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். சிறு காயங்களிலிருந்து அஜித் அவர்கள் மீண்டுவர அஜித் ரசிகர்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.