நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளி வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று நீண்ட நாட்கள் ஓடிய 100 கோடி வசூல் சாதனை படைத்தது. டாக்டர் படம் சிவகார்த்திகேயன் கேரியரில் முதல் 100 கோடியைத் தொட்ட திரைப்படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உடன் கை கோர்த்தது நடித்த திரைப்படம் தான் டான். இந்த படமும் கமர்சியல் படம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருந்தது படம் முழுக்க முழுக்க காமெடி சென்டிமெண்ட் என இருந்தால் படம் 18 நாட்களை தாண்டி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது படம்.
இதுவரை உலக அளவில் சுமார் 116 கோடி மேல் அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது தமிழகத்தில் மட்டுமே 100 கோடியை நெருங்கி உள்ளது சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம். டான் திரைப்படம் நல்ல வசூல் வேட்டை காண முக்கிய காரணம் எந்த ஒரு டாப் ஹீரோ படங்களும்.
இப்போது வெளியாகமல் இருப்பதால் வசூல் வேட்டை நடத்துவதாக கூறப்படுகிறது. டான் திரைப்படம் வசூலில் அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட் படங்களை ஒரு சில முக்கிய ஏரியாக்களில் உடைத்தெறிந்து உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படம் திருச்சி ஏரியாவில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளதாம்.
சிவகார்த்திகேயன் திரைப்படம் 18 நாளில் திருச்சி ஏரியாவில் மட்டும் 2.64 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு முன் வந்த அஜித்தின் வலிமை மற்றும் விஜயின் பீஸ்ட் ஆகிய படங்கள் கூட இந்த சாதனையை செய்ய வில்லையாம்.