தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு வருடங்களாக பல நடிகர்கள், ரசிகர்கள் என அனைவரும் எதிர்பார்த்த திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசானது. நேற்று அஜித்தின் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் பலரும் பாலாபிஷேகம், கட்டவுட், மாலை என அமர்க்களம் படுத்தினார்கள்.
அதேபோல் வலிமை திரைப்படத்தை வினோத் அவர்கள் தான் இயக்கி உள்ளார் போனிகபூர் அவர்கள் தயாரித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஹீமா குரோஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வில்லன் நடிகராக கார்த்திகேயா அஜித்துக்கு வில்லனாக நடித்து மிரட்டினார்.
படம் வெளியானதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் அதேபோல் அடுத்ததாக எவ்வளவு வசூல் என்பது தான் பலரின் கேள்வியாக இருந்துவருகிறது. இந்த நிலையில் பல ட்ரேக்கர்ஸ் மற்றும் இணையதளங்கள் பலவிதமான பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்டை கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல இணையதளம் ஒன்று பாக்ஸ் ஆபீஸ் ரிபோட் ட்விட்டரில் கொடுத்துள்ளது.
அதனை பார்த்த போனிகபூர் அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார் இதுதான் உண்மையான வசூல் என்பதை உறுதி செய்துள்ளார். அந்த வகையில் அஜீத் நடிப்பில் வினோத் இயக்கத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி விடுமுறை கொண்டாட்டம் இல்லாத நாட்களில் வெளியான வலிமை திரைப்படம் அண்ணாத்த, மாஸ்டர், சர்க்கார் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ஓபனிங் வசூல் செய்த சாதனையை அசால்ட்டாக வலிமை திரைப்படம் முறியடித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படம் இந்த சாதனையை முறியடிக்குமா என்பதை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் நிலையில் வலிமை திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 36.17 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதேபோல் அதிகபட்சமாக சென்னையில் 1.82 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது வலிமை.
தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் வசூலை பின்னுக்குத்தள்ளி வலிமை திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. மேலும் வலிமை திரைப்படம் மொத்தமாக 45 முதல் 50 கோடி ரூபாய் வரை முதல் நாள் வசூல் கடந்து இருக்கும் என தெரியவருகிறது. இனிவரும் நாட்கள் விடுமுறை நாள் என்பதால் இந்த வசூல் இப்படியே நீடித்தால் விரைவில் world wide பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாயை எளிதில் கடந்து விடும் எனத் தெரியவருகிறது.
இந்த தகவலை பிரபல இணையதளம் ஒன்றை வெளியிட அதனை உறுதி செய்துள்ளார் போனி கபூர்.