தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருந்தது படக்குழு ஆனால் சில காரணங்களால் அங்கு செல்ல முடியவில்லை.
அதனால் அஜித் இருக்கிற நேரத்தை வீணாக்காமல் தான் நடித்த கட்சிகளின் டப்பிங் வேலையை முடித்தார். இந்தநிலையில் விரைவில் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது ஸ்பெயின் நாட்டில் படமாக இருக்கும் சில காட்சிகளுக்கு அனுமதி கிடைக்காமல் படக்குழு திணறி வருகிறார்கள்.
வலிமை திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட் வெளியாகாமல் இருந்து வருவதால் ரசிகர்கள் கொஞ்சம் சோகமாக இருக்கிறார்கள் இந்த நிலையில் அஜித் பிறந்த நாளன்று அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைக்குமென சமீபத்தில் தகவல் கிடைத்தது அதாவது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகிய இரண்டும் அஜித்தின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் ஒவ்வொரு சீக்ரெட்டும் வெளியாக தொடங்கிவிட்டன. படத்தின் ரிலீஸ் மிக அருகில் இருப்பதால் படத்தின் அப்டேட்கள் அனைத்தும் படத்திற்கு பக்கபலமாக அமையும் என கருதுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்த நிலையில் வலிமை திரைப்படத்தில் பணியாற்றியுள்ள பிரபலங்களை யூடியூப் சேனல்கள் வளைத்து வளைத்து பேட்டி எடுத்து வருகிறது.
அந்த வகையில் பிரபல சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் வலிமை படத்தின் முக்கியமான காட்சிகளை.சண்டைக் காட்சிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.இதுவரை அஜித் பைக் சேசிங் காட்சிகளும் கார் சேசிங் காட்சிகளும் பார்த்திருப்போம் ஆனால் முதன்முறையாக பஸ் சேசிங் காட்சி செய்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் அந்த காட்சி மிகவும் மாசாக வந்துள்ளதாகவும் ஒவ்வொரு அடியும் இடி போல் இருப்பதாகவும் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார் திலீப் சுப்பராயன்.
இந்த தகவல் தல ரசிகர்களுக்கு பொக்கிஷம் போல் கிடைத்துள்ளதால் வலிமை திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் சண்டை பயிற்சியாளர் இப்படி கூறியது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.