தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக வலிமை திரைப் படம் வெளியாகாமல் பல தடைகளை கடந்து இன்று உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது. இந்த திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் தான் இயக்கியுள்ளார்.
மேலும் படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது அதுமட்டுமில்லாமல் அதிகாலைக் காட்சி ரசிகர்களின் காட்சி என்பதால் அஜித் ரசிகர்கள் பாலாபிஷேகம், மாலை, பட்டாசு என அமர்க்களப் படுத்தி விட்டார்கள்.
மேலும் வலிமை திரைப்படத்தில் அஜித் பைக் ரேஸ் காட்சிகளில் நடித்து மிரட்டியுள்ளார். இதனை திரையில் காணும் பொழுது ரசிகர்களுக்கு ஒரே உற்சாகம் தான். இந்நிலையில் அஜீத்தின் திரைப்படத்தில் ஹீமா குரோஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு ரசிகர்களிடையே கைதட்டலையும் பெற்றுவிட்டது.
மேலும் வில்லன் நடிகராக கார்த்திகேயா நடித்திருந்தார். மேலும் வலிமை திரைப்படத்தை காண அதிகாலையிலேயே ஹீமா குரோஷி, கார்த்திகேயா போனிகபூர் என அனைவரும் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு சென்றுள்ளார்கள் அதன் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.
இந்தநிலையில் ஹீமா குரோஷி வலிமை திரைப்படத்திற்கு முன்பு சில போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் பாத் டாப்பில் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.