வலிமை படத்தில் பைக் ஓட்டபோகிறாரா பிரபல நடிகை.? வெளியான புகைப்படத்தால் பரபரப்பு

ajith

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடித்து வெளிவந்த காலா திரை படத்தின் மூலம் தமழ் சினிமாவில் அறிமுகமான ஹுமா குரேஷி, தற்பொழுது இவர் அஜித்துடன் வலிமை படத்தில் கைகோர்த்துள்ளார் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இப்படத்தின் பட பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் நடந்து வருகிறது. தற்பொழுது கொரோனா வைரஸ் பரவி வருவதால் தற்சமயம் வலிமை படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ஹீரோயினாக ஹூமா குரோஷி  நடித்து வருகின்றார் என தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பைக் சவாரி செய்ய கற்றுக்கொண்ட புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டார்.

மும்பை சாலைகளில் தனது ராயல் என்ஃபீல்டில் பைக் சவாரிக்கு சென்றார். அவர் வரவிருக்கும் படமான வலிமை படத்தில் ஸ்டண்ட் செய்ய தனது பைக் ஒட்டி பார்கிறார் என கூறப்படுகிறது. அவர் தனது பயிற்சியாளர்களுடன் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு, வலிமை படப்பிடிப்பில் அஜித் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியை நிகழ்த்தினார். அதில் அவர் தனது பைக்கில் இருந்து நழுவி ஒரு மோசமான விபத்து ஏற்பட்டதாக கூறபடுகிறது. இருப்பினும், நடிகர் அஜித்  சிறிய காயங்களுடன் தப்பித்தார் அதன்பின் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியது.

huma
huma
huma