அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நடித்த நடிகருக்கு திருமணம் முடிந்தது அதனை அடுத்து ரசிகர்கள் பலரும் அந்தத் தம்பதியினருக்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் வலிமை இந்த திரைப்படம் வெளியாகி 300 கோடி வசூலை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் வலிமை திரைப்படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வசூல் வேட்டை செய்து வந்தது.
இன்னும் பல திரையரங்குகளில் வலிமை திரைப்படம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது இந்த னியாளியில் வலிமை திரைப்படத்தில் வில்லன் கார்த்திகேயா நடத்தி மிரட்டி இருப்பார் அதேபோல் ஹீமா குரோஷி தனது அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் வில்லன் நடிகர் கார்த்திகேயாவின் அடியாட்களாக ஒருவராக நடித்தவர் துருவன். இவருக்கும் அஞ்சலி என்ற கேரளத்து பெண்களுக்கும் கேரளாவில் உள்ள பாலக்காடு என்ற பகுதியில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
இதனால் இந்த புது தம்பதியினருக்கு வாழ்த்துக்களையும் பலரும் தெரிவித்து வருகிறார்கள். இந்த தம்பதியினரின் திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த பல ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் தற்பொழுது பிரித்திவிராஜ் நடிப்பில் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜன கன மன என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மேலும் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.