தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் வலிமை.! எப்பொழுது எத்தனை மணிக்கு தெரியுமா.!

ajith valimai
ajith valimai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் H வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் ஹீமா குரோஷி அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் கார்த்திகேயா சுமித்ரா புகழ் என  பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியானது. அதேபோல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது இந்த திரைப்படம் சுமார் 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சென்னையில் நடக்கும் கொலை கொள்ளை கும்பலை ஒழித்துக் கட்டுவது  இந்த திரைப்படத்தின் கதை அந்த  கொள்ளைக்கார கும்பலில் அஜித்தின் தம்பி மாட்டிக்கொள்வார் அவரை எப்படி அதிலிருந்து மீட்டு கொண்டு வருகிறார் கொலை கொள்ளை செய்யும் கும்பலை எப்படி ஒழித்து கட்டுகிறார்கள் என்பது தான் படத்தின் கதை.

இந்த நிலையில் திரையரங்கில் வெளியாகிய வலிமை திரைப்படம் முப்பது நாட்களுக்குப் பிறகு ஜி5 OTT இணையதளத்தில் வெளியானது OTT இணையதளத்தில் வெளியாகிய வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் கண்டு களித்தார்கள் அதுமட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது.

இந்த நிலையில் அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி அஜித் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் ஒன்று இருக்கிறது. அதாவது வருகின்ற மே 1ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை கொண்டாட இருக்கிறார்கள்.

வலிமை திரைப்படம் ஜி 5 தொலைக்காட்சியில் வருகின்ற மே 1ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு வலிமை திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான புதிய ப்ரோமோ வீடியோவை ஜீ 5 நிறுவனம் தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.