வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.! அடிதிரடி வீடியோவை வெளியிட்ட வடிவேலு!!

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் பட்டாளம் உண்டு அதுபோல காமெடி நடிகர்களுக்கும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்பதை நிரூபித்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரா வலம் வந்தவர். நடிகர் வடிவேல் அவர்கள் காமெடியனாக என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். ஆனால் அதிகாரப்பூர்வமாக 1991 ஆம் ஆண்டு வெளிவந்த என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் வந்ததாக கூறப்படுகின்றன.

தொடர்ந்து அவர் காமெடிநடிகனாக பல படங்களில் நடித்து மட்டும்மில்லமால் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் தன்னை சினிமா துறையிலும் முன்னணி காமெடி நடிகராக தன்னையே நிலைநிறுத்திக் கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர் ஹீரோவாக பல்வேறு படங்களில் நடிக்க தொடங்கினார் இதனாலேதான் அவருக்கு தலைவலி ஏற்பட்டன.

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு அவர்கள் நடித்து வெளிவந்த இருபத்தி மூன்றாம் புலிகேசி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதனை தொடர்ந்து அவர் 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார். இப்படத்தை ஷங்கர் தான் தயாரித்திருந்தார். வடிவேலு அவர்களோ இப்படத்தில் நான் நடிக்க வேண்டுமென்றால் முன்னணி ஹீரோக்கள் மற்றும் மிகப்பெரிய பட்டாளங்கள் இருக்கக் கூடாது எனவும் அப்படி இருந்தால் நான் அடிக்க மாட்டேன் எனவும் அவர் கூறியிருந்தார். ஆனால் வடிவேலு அவர்களுக்கும் சங்கருக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது இதனாலையே படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

திரைப்படங்களில் வடிவேல் அவர்கள் நான் நடிக்கப் போவதில்லை எனக் கூற தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டது படத்தை முடித்து தரவும் இல்லையேல் வடிவேல் ஏற்பட்டால் 9 கோடி ரூபாய் நஷ்ட தொகையை தரும்படி பட குழுவினர் புகார் அளித்தனர் ஆனால் பணத்தை திரும்ப தர மறுத்ததால் திரைப்பட தயாரிப்பாளர்கள் வடிவேலுக்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்தது. அவரை யாரும் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என அறிக்கையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகர் என வடிவேலை காணாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் தனது சமூக வலைத்தளத்தில் மீம்களில் தற்பொழுதும் ராஜாவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் வடிவேலு.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு நான் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகி நாளும் என்னை மறக்காமல் இருக்கும் தமிழ் மக்களுக்கு வணக்கம் என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய்விட்டது. தற்போது ஒரு புதிய ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்து உள்ளார் மட்டுமில்லாமல் இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் நடிகர் வடிவேலு.