பாடல் எழுதுறேன் என சென்சார் போர்டையே அதிர வைத்த வைரமுத்து.! ஆத்தாடி இதெல்லாம் டபுள் மீனிங்கா.?

vairamuthu double meaning
vairamuthu double meaning

vairamuthu : கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியர் இவர் முதன் முதலில் சினிமாவுலகில் நிழல்கள் என்னும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது என்ற பாடலை எழுதியதன் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து பல திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 7000 பாடலுக்கு மேல் எழுதி புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. இவர் மீது பின்னணி பாடகி சின்மயி பல குற்றச்சாட்டுகளை வைத்தார் அது மட்டும் இல்லாமல் கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். மேலும் என்னதான் வைரமுத்து மீது சின்மயி குறை சொன்னாலும் வைரமுத்துக்கு ஆதரவாக பலரும் பேசினார்கள்.

ஆனாலும் சிலர் வைரமுத்துவை சந்தேகத்துடன் பார்த்தார்கள் இந்த நிலையில் வைரமுத்து பல பாடல்களில் டபுள் மீனிங் அர்த்தங்களுடன் எழுதியுள்ளார் அந்த வரிகளை இங்கே காணலாம்.

2017 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் காற்று வெளியிடை இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சாரட்டு வண்டியில் உள்ள பாடலில் “ஆணுக்கோ பத்து நிமிஷம் பெண்ணுக்கோ ஐந்து நிமிஷம்” என்ற வரி அமைந்திருக்கும் இந்தப் பாடல் டபுள் மீனிங் அர்த்தங்களுடன் எழுதப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் சசி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் அசல் இந்த திரைப்படத்திலும் வைரமுத்து தன்னுடைய வேலையை காட்டி உள்ளார் அதாவது இந்த திரைப்படத்தின் பாடல் ஆன “ஏ துஷ்யன் தா” என்ற பாடலில் “பூங்காவில் மழை வந்ததும் புதர் ஒன்று குடையானதும் மழை வந்து நனைக்காமலே மடி மட்டும் நனைத்தாய் மறந்தது என்ன கதை” என்ற வரி எழுதப்பட்டிருந்தது இந்த வரி ஆழ்ந்து ஆராய்ந்தால் டபுள் மீனிங் என்று தெரிய வரும்.

அதேபோல் 1998 ஆம் ஆண்டு பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஜீன்ஸ் இந்த திரைப்படத்தில் அன்பே அன்பே என்ற பாடல் இடம் பெற்றிருக்கும் இந்த பாடலில் “பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன் ஆகா அவனே வள்ளலடி” என்ற வரி இடம் பெற்றிருக்கும் இந்த வரியை படித்தால் பலருக்கும் புரிந்துவிடும் டபுள் மீனிங் என்று இப்படி வைரமுத்து பல பாடல்களில் டபுள் மீனிங் வரிகளை சேர்த்து எழுதியுள்ளார்.