மீரா மிதுன் குறித்து சூர்யாவின் பதிவிற்கு தன்னுடைய கவிதையால் பாராட்டிய வைரமுத்து.! பெயருக்கு ஏற்றது போல் வரிகளும் முத்துதான்

vairamuthu tweet about suriya tweet :  நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்பொழுது சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்தினர், அந்த சலசலப்பு அடங்கி முடிவதற்குள் அடுத்த சர்ச்சையை கிளப்பி அதில் பிரபலமடைய நினைத்து வருகிறார்.

அந்தவகையில் மீராமிதுன் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை, அதனால் இது சரிப்பட்டு வராது என முன்னணி நடிகர்களை விமர்சித்து பிரபலம் அடைந்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா மற்றும் விஜய்யை தாறுமாறாக விமர்சித்தார் அதுமட்டுமில்லாமல் அவர்களின் மனைவிகளை கொச்சையாக பேசி அதன்மூலம் பிரபலமடைய நினைத்தார், இதற்கு பல ரசிகர்கள் மீரமிதுனை வெளுத்து வாங்கினார்கள் அதுமட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களும் தங்களது கருத்தை தெரிவித்து வந்தார்கள்.

அந்த வகையில் பாரதிராஜா முதல், ஆர்த்தி, மனோபாலா, விவேக் என அனைவரும் மீரா மிதுனை வெளுத்து வாங்கினார்கள், அந்த வகையில் கவிஞர் வைரமுத்து மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சூர்யாவின் பதிவை பார்த்து பாராட்டியுளளார்.

வைரமுத்து அவரது பதிவில் சுமத்தப்பட்ட பழியின் மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று. பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை; பாராட்டுகிறேன்.
நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை.

என தன்னுடைய முத்துப்போன்ற வரிகளால் சூர்யாவை பாராட்டியுள்ளார் இதைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் வைரமுத்துவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள், அதில் ஒரு ரசிகர் உங்களின் வரிகளும் உங்கள் பெயருக்கு ஏற்றது போல் முத்துப் போல் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.