G. Marimuthu: மாரிமுத்து நேற்று மரணமடைந்த நிலையில் இவர் குறித்து ஏராளமான பிரபலங்கள் தொடர்ந்து பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். இவருடைய இழப்பு ரசிகர்கள், திரை பிரபலங்கள் மத்தியிலும் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் நன்றாக இருந்து வந்த மாரிமுத்து தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வந்தார்.
இவ்வாறு திடீரென மாரடைப்பு காரணமாக இவருடைய மரணம் நேர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனரும், நடிகரும், சீரியல் நடிகருமான மாரிமுத்துவிற்கு தற்பொழுது 57 வயது ஆகிறது இவர் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திரைப்படங்களும் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாத காரணத்தினால் பிறகு நடிப்பை தொடர்ந்தார்.
அப்படி சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து கமலின் இந்தியன் 2 ,சூர்யாவின் கங்குவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்ததன் மூலம் தான் மிகப்பெரிய பிரபலத்தை பெற்றார்.
இவ்வாறு இந்த சீரியலின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற மாரிமுத்துவிற்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவருடைய இழப்பு அவருடைய குடும்பத்தினர்கள் மட்டும் இன்றி திரை உலகினர்களையும், ரசிகர்களையும் சோகத்தை ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில் மாரிமுத்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது குடும்பத்தினர்களுடன் பேட்டியளித்தார்.
அதில் கனவு இல்லம் கட்டி வருவதாகவும் திருமணமாகி 27 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்பொழுது தான் வீடு கட்ட ஆரம்பித்ததாகவும் கூறினார். இதனை அடுத்து தற்பொழுது கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
தம்பி மாரிமுத்துவின், மரணச் செய்தி கேட்டு, என் உடம்பு ஒருகணம், ஆடி அடங்கியது, சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை, மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது. என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன், என் உதவியாளராய் இருந்து நான் சொல்லச் சொல்ல எழுதியவன், தேனியில் நான்தான் திருமணம் செய்து வைத்தேன் இன்று அவன் மீது இறுதி பூக்கள் முழுவது கண்டு இதயம் உடைகிறேன் குடும்பத்துக்கும் கலை அன்பர்களுக்கும் கண்ணீரை துடைத்துக்கொண்டே ஆறுதல் சொல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.