உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று மிகவும் கோலாகலமாக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருட காதல் தினமான இன்று இளசுகள் பெரியவர்கள் என அனைவரும் தங்களுடைய மனைவி மற்றும் காதலர்களுக்கு பரிசு பொருட்கள், பார்ட்டி என கொண்டாடி தங்களுடைய காதலை பரிமாறி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் உலக காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தன்னுடைய பாணியில் காதலர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். இன்று காதலர் தினம் என்பதால் சில நாடுகளில் அனைவருக்கும் விடுமுறைகள் கூட வழங்கப்பட்டுள்ளது எனவே அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வரும் நிலையில் பல பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையின் நடிகர் கமலஹாசன் அவர்கள் சாதி ஒழிந்த சமநிலை சமூகத்தை கொணர பெருங்கருவியாய் இருப்பது காதல் தான், இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பை செழிக்க செய்க நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம் என தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல கவிஞர் வைரமுத்தும் சோசியல் மீடியாவின் மூலம் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது,
எந்த நிலையிலும் வரலாம், எந்த வயதிலும் வரலாம் அது ஒன்றல்ல இரண்டு, மூன்று நான்கென்று எண்ணிக்கை வரலாம் ஆனால் என்னதான் அது இன்று இருதயத் துடிக்கும், எப்போதுதான் நேரும் என்ற உடலின் தவிக்கும் இடைவெளியில் நேருகின்ற துன்பம் குழைத்த இன்பம் தான் காதல் அந்த முதல் அனுபவம் வாழ்க.. என குறிப்பிட்டுள்ளார்.
கவிதை, பாடல்கள் என அனைத்திலும் சிறந்து விளங்கும் வைரமுத்து தன்னுடைய குரலால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது வைரமுத்துவின் காதலர் தின வாழ்த்து பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது கிட்டத்தட்ட சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக பாடல் ஆசிரியராக கவிஞர் வைரமுத்து விளங்கி வருகிறார்.