தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும், கவிஞராகவும் ,சிறந்த விளங்கி வருபவர் வைரமுத்து. இவர் ஆரம்ப காலகட்டத்தில் இளையராஜாவுடன் இணைந்து வழங்கிய பாடல்கள் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது அதனைத் தொடர்ந்து ஏ ஆர். ரகுமான் அவர்களுடன் இணைந்து வழங்கிய பாடல்களும் பேரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. பல கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். அதில் டபுள் மீனிங் பாடலை இங்கே காணலாம்.
காற்று வெளியிடை : கார்த்தி, அதிதி ராவ், ஆர் ஜே பாலாஜி, சரதா ஸ்ரீநாத் டெல்லி கணேஷ் ஆகியோ நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாக்கிய திரைப்படம் தான் காற்று வெளியிடை இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சரட்டு வண்டியில் என்ற பாடலில் ஆணுக்கும் பத்து நிமிஷம் பென்னுக்கும் ஐந்து நிமிஷம் என்ற டபுள் மீனிங் வரிகள் இருக்கும்.
அசல் : 2010 ஆம் ஆண்டு அஜித் குமார், சமீரா ரெட்டி, பாவனா, பிரபு ஆகியோர் நடிப்பில் சரண் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் அசல். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள துஷ்யன்தா என்ற பாடலில் இடையில்” பூங்காவில் மழை வந்ததும், புதர் ஒன்று குடை ஆனதும், மழை வந்து நனைக்காமலே, மடி மட்டும் நனைத்தாய் மறந்தது என்ன கதை ” என்ற டபுள் மீனிங் கொண்ட வரிகளால் இந்த பாடல் அமைந்திருக்கும். இதை வைரமுத்து அவர்கள் தான் எழுதியிருந்தார்.
அதேபோல் 1998 ஆம் ஆண்டு பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஜீன்ஸ் இந்த திரைப்படத்தை சங்கர் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்திலும் அன்பே அன்பே என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் “பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்து தலைசுற்றிப் போனேன் ஆகா அவனே வள்ளலடி ” என்ற இரட்டை அர்த்தமுள்ள வரிகள் இந்த பாடலில் அமைந்திருக்கும்.
இந்த பாடலையும் வைரமுத்து அவர்கள் தான் எழுதி இருந்தார். இப்படி வைரமுத்து அவர்கள் இரட்டை அர்த்தமுள்ள பாடல்கள் எழுதியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த வரிகளை பார்த்த ரசிகர்கள் அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே என்ன கமெண்ட் செய்து வருகிறார்கள்.