விஜய் சேதுபதியுடன் அடுத்த படத்தில் இணைந்த வைகைப்புயல் வடிவேலு.! இயக்குனர் யார் தெரியுமா.?

vijay-sethupathy
vijay-sethupathy

80,90 காலகட்டத்தில் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகர் வைகைப்புயல் வடிவேலு இவருடைய சிறந்த நடிப்பு திறமையினால் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் சில காலங்களாக பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு தற்பொழுது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் கம்ப கொடுகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சோசியல் மீடியாவில் ஏராளமான மீன் கிரியேட்டர்களுக்கு குருவாக இருந்து வருகிறார்.

நடிகர் வடிவேலு ஏனென்றால் எந்த மீமை பார்த்தாலும் அதில் வடிவேலு புகைப்படத்துடன் அவருடைய வசனத்துடன் தான் இருந்து வருகிறது. இவருடைய பேச்சு மட்டும் இன்றி பாடி லாங்குவேஜ் பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது. இவ்வாறு தமிழ் சினிமாவில் இன்று வரை தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்திருக்கிறார். நடிகர் வடிவேலு இவ்வாறு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பகத் பாஸில், உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர்களின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவ்வாறு இதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற பொழுது அங்கு செய்தி வாசிப்பாளர்களை சந்தித்த வடிவேலு ஏராளமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் உங்களின் அடுத்த ப்ராஜெக்ட் என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறினார்.

இவ்வாறு கலைப்புலி தாணு தயாரிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜய் சேதுபதி வெற்றிமாறனின் விடுதலை, கத்ரீனா கைஃபுடன் மேரி கிறிஸ்துமஸ், ஷாருக்கான உடன் ஜவான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.