செந்தில்,கவுண்டமணிக்கு பிறகு காமெடி செய்வதில் நடிகர் வடிவேலுவை அடித்துக் கொள்ளவே முடியாது நடிகர் வடிவேலு இல்லாமல் அந்த காலத்தில் ஒரு திரைப்படம் கூட இருக்காது என பல சினிமா பிரபலங்களும் கூறுவார்கள் ஏனென்றால் நடிகர் வடிவேலுவின் நடிப்பு திறமையை பார்த்து பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்து கொண்டே இருக்குமாம் இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.
பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் இவர் நடிப்பில் முதன்முறையாக வெளியான திரைப்படம் என்றால் அது 23 ஆம் புலிகேசி திரைப்படம் தான் மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காமெடி நடிகர் வடிவேலு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார் இருபத்தி மூன்றாம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் இவருக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் ஒரு சில பிரச்சனைகள் வந்ததால் இவர் இனிமேல் எந்த திரைப்படங்களிலும் நடிக்கக்கூடாது என ரெட் கார்டு தரப்பட்டது.
இதன் பின்பு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் திரையுலகில் நடிகர் வடிவேலு நடிக்கலாம் என உத்தரவு வந்துள்ளதால் மீண்டும் தற்போது வடிவேலு தொடர்ச்சியாக திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
மேலும் லைகா தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கான சந்திப்பு நேற்று நடந்துள்ளதாம் அதில் வடிவேலு ஒரு சில விஷயங்களைப் பற்றி கூறியுள்ளாராம் அதிலும் குறிப்பாக தனது நண்பன் விவேக் பற்றி ஒரு சில தகவல்களை கூறியுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
அதில் விவேக் தனது நெருங்கிய நண்பர் அவரது இழப்பை என்னால் மறக்க முடியவில்லை மிகப்பெரிய வேதனையாக இருக்கிறது தற்பொழுது விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.