துக்கம் தொண்டையை அடைக்கிறது விவேக்கின் இறப்பு குறித்து வடிவேலு வெளியிட்ட வீடியோ.!

vadivel
vadivel

தனது திரைப் பயணத்தில் நிறைய திரைப்படங்கள் நடித்து இன்றுடன் மறைந்த நடிகர் என்றால் அது விவேக் தான் இவர் எக்கச்சக்கமான திரைப்படங்களில் தனது அயராத உழைப்பை காட்டி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் இவரது இறப்பு குறித்து சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தார்கள் இந்நிலையில் வடிவேலும் தனது வருத்தத்தை வீடியோ மூலம் தெரிவித்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஆம் அதில் விவேக்கின் மரணம் குறித்து கேட்கையில் என்னுடைய தொண்டை அடைக்கிறது ஏனென்றால் அவனைப் போல் ஒரு நல்ல மனிதன் கிடையாது என்றும் வெளிப்படையாக பேசும் மனிதனும் அவன் தான் எனவும் கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் எத்தனை கோடி ரசிகர்கள் இருந்தாலும் நான் அவனுக்கு ஒரு ரசிகன் அவன் எனக்கு ஒரு ரசிகன் என்று அவனுடன் நான் பழகி வந்தேன்.

அதுமட்டுமல்லாமல் அய்யா அப்துல்கலாம் கூறிய பொன்மொழிக்கு ஏற்ப இவன் பல மரக்கன்றுகளை வாங்கி நடுவான் எப்பொழுதும் என்னை என்னடா வடிவேலு எப்படி இருக்க என ஜாலியாக பேசுவான்.

அவனது இறப்பிற்கு என்னால் வர முடியவில்லை நான் எனது தாயாருடன் மதுரையில் இருக்கிறேன் மேலும் இந்த நிலையில் அவனது இறப்பு கேட்ட எனக்கு தொண்டையை அடைக்கிறது எனவும் விவேக்கின் குடும்பத்தினர் எதற்கும் பயப்பட கூடாது.

ஏனென்றால் விவேக் உங்களுடன் இருப்பான் அவனது ஆத்மா சாந்தி அடையும் இதற்கு மேல் என்னால் என்ன பேசுவது என்று தெரியவில்லை என கூறியுள்ளாராம் வடிவேலு இதனையடுத்து  இந்த தகவல் தற்போது விவேக் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.