90 கால கட்டங்களில் இருந்து பல டாப் நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் வடிவேலு. பின்பு ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
இப்படி சினிமாவில் ஹீரோ காமெடி நடிகர் என சிறப்பாக நடித்து வந்த வடிவேலு ஒரு சமயத்தில் இனி சினிமாவில் நடிக்கக் கூடாது என கட்டளை வந்தது அதனைத் தொடர்ந்து நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேல் தற்போது அந்த பிரச்சனை எல்லாம் முடிவடைந்து சில படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகின்ற நிலையில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து பெயர் வைக்கப்படாத சில படங்களிலும் வடிவேலு நடித்து வருகிறார்.
அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் போன்ற பல முக்கிய நடிகர் நடிகைகளும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த..
நிலையில் தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளதாம் மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக வடிவேலு நடித்துள்ளாராம். ஆனால் இந்த படத்தில் அவர் நகைச்சுவை நடிகராக நடிக்கவில்லை என்றும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக ஏற்று நடித்து உள்ளார் என கூறப்படுகிறது.