தமிழ் திரையுலகில் தற்போது பல நடிகர்கள் காமெடியனாக வளர்ந்து வருகிறார்கள் ஆனால் அவர்களெல்லாம் ரசிகர்களிடையே நல்ல பெயரை வாங்குவதில்லை என்றென்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தான் வடிவேலு.
இவர் நடிக்கும் எல்லா திரைப்படத்திலும் தனக்கென ஒரு வசனத்தை உருவாக்கிக் கொள்வார் என்பது பலருக்கும் தெரியும்.
மேலும் வடிவேலு திரைப் படங்களில் காமெடியனாக மட்டும் நடிக்காமல் ஒரு சில திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் அவ்வாறு இவர் நடித்த திரைப்படங்கள் தான் 23ஆம் புலிகேசி, எலி, தெனாலிராமன் போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் சினிமா பயணத்தை பற்றி அதிகமாக நாம் அறிந்திருப்போம் ஆனால் அவர் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் எவ்வளவு கோடிக்கணக்கான சொத்துக்கள் வைத்துள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல்கள் வெளிவந்துள்ளது.
அந்த தகவல் என்னவென்றால் வடிவேலு ஒரு திரைப்படத்திற்கு 3 கோடி சம்பளம் வாங்குவாராம் அதேபோல் வடிவேலின் முழு சொத்து மதிப்பு சுமார் 120 கோடி வரை இருக்கிறதாம்.
தற்போது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.