தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்து கொண்டு இருந்தவர் நடிகர் வடிவேலு. இவர் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து பல ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இதனை தொடர்ந்து 23ஆம் புலிகேசி திரைப்படத்திற்கு பிறகு வடிவேலு சினிமாவை விட்டு சிறிது ஆண்டுகள் விலகி இருந்தார். அதன் பிறகு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் முடிவடைந்த நிலையில் போஸ்ட் பிரமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியாக உள்ள நாய் சேகர் படத்தின் சாட்டிலைட் உரிமை மற்றும் ஓடிடி உரிமம் குறித்து லைக்கா நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
அதாவது சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளதாகவும் ஒடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது அது மட்டுமல்லாமல் சார்ஜ் லைட் உரிமையையும் ஒடிடி உரிமையும் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் நடிகர் வடிவேலு நடித்து வருகிறார்கள் ஏற்கனவே சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்திருந்த வடிவேலு இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதால் ரசிகர் மத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இதனை தொடர்ந்து நாய் சேகர் படம் எப்போது வெளியாகும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என காத்திருக்கின்றனர்.