தமிழ் சினிமா உலகில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருக்கின்றனர் ஆனால் அசுர வளர்ச்சியை எட்டியவர் என்றால் அது வைகை புயல் வடிவேல் தான் இவர் 80 கால கட்டங்களில் இருந்து படங்களில் நடித்து வருகிறார். இதுவரை அஜித், விஜய், ரஜினி, விஜயகாந்த், கமல், சத்யராஜ், சரத்குமார் என பல டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வெற்றி கண்டவர்.
தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த இவர் ஹீரோவாகவும் நடித்து அசத்தி உள்ளார் அந்த வகையில் 23ம் புலிகேசி, தெனாலி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து ஓடினார். இந்த சமயத்தில்தான் ஷங்கருக்கும், வடிவேலுக்கும் இடையே பிரச்சனை வர தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு படங்களில் நடிக்க கூடாது என நிபந்தனை விதித்தது.
இதனால் நான்கு வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார் ஒரு வழியாக அந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் வந்தவுடனே வாய்ப்புகள் ஏராளமாக கைப்பற்றி இருக்கிறார். அதில் முதலாவதாக இவர் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக மண்ணை கவ்வியது.
இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் சந்தோஷமாக நடித்து வருகிறார் அந்த வகையில் வடிவேலு கையில் சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற படங்கள் இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் வடிவேலு பற்றிய செய்தி ஒன்று வைரலாகி வருகிறது வடிவேலுவின் மகன் மற்றும் அவரது தம்பி போன்றவர்களின் புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம்..
ஆனால் வடிவேலு அவரது மனைவியை பெரிதாக மீடியா உலகில் காட்டியதே கிடையாது இப்படி இருக்கின்ற நிலையில் வடிவேலு தனது மனைவியுடன் இருக்கும் அந்த அரிய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..
